- மத்திய அமைச்சர்
- சுரேஷ் கோபி
- திருவனந்தபுரம்
- மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர்
- இரவிபுரம்
- கொல்லம்
திருவனந்தபுரம்: ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் பெற்றோர் தங்கியிருந்த வீடு கொல்லம் அருகே உள்ள இரவிபுரம் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் யாரும் தங்குவது கிடையாது. இதனால் பெரும்பாலும் பூட்டப்பட்டிருக்கும். சுரேஷ் கோபி அல்லது அவரது உறவினர்கள் இங்கு சென்று தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று சுரேஷ் கோபியின் தம்பி மற்றும் குடும்பத்தினர் இந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது 2 பேர் வீட்டின் சுவரை தாண்டி குதித்து வெளியே ஓடியது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப் மற்றும் சில பொருட்களை காணவில்லை. இதுகுறித்து இரவிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்ததில் இருவரும் அப்பகுதியை சேர்ந்த திருடர்கள் என தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு: 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.