- மாவோயிஸ்டுகள்
- ஆந்திரா திருமலை
- ஆந்திரா
- அல்லூரி சீதாராமராஜு
- ஆந்திரப் பிரதேசம்
- சிந்துார் தேசிய நெடுஞ்சாலை
- தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
*ஆந்திராவில் பரபரப்பு
திருமலை : ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்து பயணிகளை இறக்கிவிட்ட மாவோயிஸ்டுகள், காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீத்தாராமராஜு மாவட்டம் சிந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பத்ராச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை மாவோயிஸ்டுகள் வழிமறித்து நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை இறக்கிவிட்டனர். பின்னர் காரை தீ வைத்து எரித்தனர்.
கடந்த 2ம் தேதி முதல் 9ம் தேதி(நேற்று முன்தினம்) வரை மாவோயிஸ்டுகளின் வார விழா நடந்த நிலையில், மாவோயிஸ்டுகள் இச்செயலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் போலீசார் என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் பலர் உயிரிழந்து, அவர்களது இயக்கம் பின்னடைவைச் சந்தித்ததால், ஆந்திராவில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனால் காரில் வந்தவர்கள் விவரங்களையும் போலீசார் ரகசியமாக வைத்து விசாரணை நடத்துகின்றனர். ஆந்திராவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுவடைய செய்யாமல் அவர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை எரித்த மாவோயிஸ்டுகள் appeared first on Dinakaran.