நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழையானது பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் நாகை மாவட்டம் இடம்பெற்றுள்ளது. டெட்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து நாகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்பல், திருமருகல், குத்தாலம், நரிமணம், நடுக்கடை பகுதிகளில் சாரல்மழை பெய்து வந்த நிலையில் சுமார் 3 மணி நேரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. மேலும் இதேபோல் நாகப்பட்டினம், வேளாங்கன்னி, கீழ்வேலூர், திருகோனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 மணி நேரமாக சாரல் மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலில் சூறக்காற்று வீசுவதாலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்க கூடிய மீன்வர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மின்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரக்கணக்கன ஃபைபர் படகுகள் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைகப்பட்டுள்ளது.
The post நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.