×

முடிவைத்தானேந்தல் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

தூத்துக்குடி, டிச. 11: முடிவைத்தானேந்தல் லோபா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது. சோபுகாய் கோஜீரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். பள்ளி தாளாளர் சுப்புலெட்சுமி, முதல்வர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் பயிற்சி முகாமில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டயத்தை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை சோபுகாய் கோஜீரியோ கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துராஜா செய்திருந்தார்.

The post முடிவைத்தானேந்தல் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Karate ,Nayathanendal School ,Thoothukudi ,Karate Special Training Camp ,Naythanendal Lopa Kindergarten ,Primary School ,Suresh Kumar ,Sobukai Gojirio Karate School of India ,training camp ,Dinakaran ,
× RELATED நாசரேத் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்