- தூத்துக்குடி கல்லூரி
- தேசிய சாகச முகாம்
- தூத்துக்குடி
- தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி
- தேசிய
- சாகச
- முகாம்
- மாரிச்செல்வி
- ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி
- தூத்துக்குடி புதுகிராமம்
தூத்துக்குடி, டிச. 11: தேசிய சாகச முகாமில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவி பங்கேற்றார்.தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி 2ம் ஆண்டு ஆடை வடிவமைப்புத் துறையை சேர்ந்த மாணவி மாரிச்செல்வி, பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற என்எஸ்எஸ் முகாமில் பங்கேற்று தேசிய சாகச முகாமிற்கு தேர்வானதை தொடர்ந்து 10 நாட்கள் இமாசலபிரதேசம், மணாலியில் நடந்த தேசிய சாகச முகாமில் பங்கேற்று கல்லூரி திரும்பினார். தேசிய சாகச முகாமில் பங்கேற்ற மாணவி மாரிச்செல்வியை கல்லூரி முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவல்லி, நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் பகவதிதங்கம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
The post தேசிய சாகச முகாமில் பங்கேற்பு தூத்துக்குடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.