×

திடீரென தீப்பிடித்து எரிந்த மொபட் போலீசார் விசாரணை ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், டிச.11: ஒடுகத்தூர் அருகே புளிய மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா(27), இவர் குப்பம்பாளையம் கிராமத்தில் நடந்து வரும் நூறு நாள் வேலை திட்டம் குறித்து சமூக தணிக்கை (ஆடிட்டிங்) செய்ய வரும் அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக நேற்று தனது மொபட்டில் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்குள்ள புளிய மரத்தின் நிழலில் மொபட்டை நிறுத்தி விட்டு கிராமத்திற்குள் சிறிது தூரம் சென்றார். அப்போது, நிறுத்தி இருந்த மொபட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கவனித்த அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் மொபட் முழுவதும் கருகி சேதமானது. இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் தானாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திடீரென தீப்பிடித்து எரிந்த மொபட் போலீசார் விசாரணை ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Odukatur ,Jeeva ,Ellapbanpatty ,Odukathur ,Kupampalayam ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே இன்று அதிகாலை...