- முன்னாள்
- கர்நாடக
- முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா
- பெங்களூரு
- சதாசிவ நகர், பெங்களூர்
- கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா
- தின மலர்
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா(92) முதுமை காரணமாக சில மாதங்கள் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள வீட்டில் காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சோமனஹள்ளி கிராமத்தில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த எஸ்.எம். கிருஷ்ணா. கடந்த 1971 முதல் 2017 வரை 46 ஆண்டுகள் காங்கிரசில் இருந்தார். அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் உறுப்பினராக இருந்தார்.
கர்நாடக முதல்வர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி கடந்த 2017ம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
The post கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார் appeared first on Dinakaran.