- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- கர்நாடக
- முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- எஸ்.எம். கிருஷ்ணா
- கிருஷ்ணா
- கர்நாடக முதலமைச்சர்
சென்னை: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்திய அரசியலில் உறுதியும் தொலைநோக்கும் மிகுந்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கர்நாடகத்தின் முதல்வராக கிருஷ்ணா அம்மாநிலத்தை குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பாதையில் செலுத்தினார். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உலகளவில் நம் நாட்டின் நிலையை தனது தலைமைத்துவத்தாலும் சாமர்த்தியத்தாலும் வலுப்படுத்தினார்.
கலைஞருடன் 1960களின் இறுதி பகுதியில் இருந்தே ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, மாநிலக் கூட்டுறவு பற்றிய ஒருமித்த பார்வை, முற்போக்கான ஆட்சிமுறை ஆகியவற்றின் வழியே நெருக்கமான நட்புறவை அவர் கொண்டிருந்தார் என்பதையும் நினைவுகூர்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அவரது தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பெரும் பங்களிப்புகளுக்காக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு அவர் நினைவுகூரப்படுவார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.