தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்துவீட்டு மாடியில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன், பால சுந்தரி தம்பதி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லாமல் இரண்டாவது மகன் கருப்பசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கருப்பு சாமியை காணவில்லை என்று பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 3 தனிப்படைகல் அமைத்து தேடிவந்த நிலையில் பக்கத்துவீட்டு மடியில் இருந்து சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவன் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதால் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் நேற்று காணாமல்போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.