×

சோனியா காந்திக்கு 78வது பிறந்தநாள்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘சோனிய காந்தி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் பூரண உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் பெற பிரார்த்திக்கிறேன்’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே , சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும், பகுஜன் சமாஜின் மாயாவதியும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post சோனியா காந்திக்கு 78வது பிறந்தநாள்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Modi ,New Delhi ,Former ,Congress ,president ,Sonia Gandhi ji ,
× RELATED சோனியா காந்தியின் பிறப்பு முதல்...