புதுடெல்லி: யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக க்யூட் தேர்வு நடத்தப் படுகிறது. க்யூட் தேர்வு முறையை தொடர்ந்து மேம்படுத்தும் விதமாக, அதை மதிப்பாய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை யுஜிசி அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைகளின்படி, தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அவற்றின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை விவரிக்கும் வரைவு திட்டத்தை விரைவில் வெளியிடுவோம்’’ என்றார்.
The post க்யூட் தேர்வு முறை விரைவில் மாற்றம்: யுஜிசி தகவல் appeared first on Dinakaran.