வாஷிங்டன்: சிரியா அதிபர் அல் ஆசாத்தின் அரியாசனத்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிளர்ச்சி படைகள் கவிழ்த்ததை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதிபர் அல் ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார். நீண்ட நெடுங்காலமாக சிரியா மக்கள் துன்பத்தை அனுபவித்து வந்த நிலையில் அல் ஆசாத் அதிகாரத்திலிருந்து கீழே விழுந்தது வரலாற்று பூர்வமான நிகழ்வு என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் அல் ஆசாத் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தான் உள்ளார் என்று அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். அல் ஆசாத்தின் வீழ்ச்சிக்கு பிரிட்டன் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அபுதாபியில் பேட்டி அளித்த அவர் சிரியா மக்கள் நீண்ட காலம் அல் ஆசாத்தின் மிருகத்தனமான ஆட்சியை பொறுத்துக்கொள்ள வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்ததில் தங்களின் பங்களிப்பும் உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அல் ஆசாத்தின் வீழ்ச்சிக்கு இஸ்ரேல் தான் கரணம் என்று ஈரானும் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே அல் ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டதற்கு ஜெர்மனி, பாலஸ்தீனம்,போலந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அனைத்து சிரியா குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க முயலும் அதே நேரத்தில் வன்முறையை தவிர்க்குமாறு கிளர்ச்சியாளர்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post சிரியா அதிபர் அல் ஆசாத்தின் அரியாசனத்தை கவிழ்த்த கிளர்ச்சி படைகள்: பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.