சென்னை : டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அவை முன்னவர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? இல்லையா?; வரவேற்கிறீர்களா இல்லையா ? ஒரே வரியில் பதில் சொல்லுங்கள் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளோம்; விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.
The post டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.