×

பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

பண்ருட்டி : கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்அகிலன் (16). இவன் 3 பேருடன் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் பணிக்கன்குப்பம் செக் டேம் அருகே நேற்றுமுன்தினம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அகிலன் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வேல்முருகன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கிய அகிலனை தேடினர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் அகிலன் கிடைக்காததால் மீண்டும் நேற்று காலை அவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் உடல் நீரில் மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்து நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kedilam river ,Panruti ,Arumugam ,Malikampattu ,Kadambuliyur ,Cuddalore district ,Akhilan ,Panruti Kedilam river ,Panikkankuppam ,dam ,Dinakaran ,
× RELATED கடலூர் கெடிலம் ஆற்றில் சிக்கித் தவித்த 4 பேர் மீட்பு..!!