×

தூத்துக்குடி அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது

 

ஸ்பிக்நகர், டிச. 9:தூத்துக்குடி அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தரங்கம்பாடி சாமிநாதபுரத்தைச் சேர்ந்த பெருமாளின் மகன் பிரகாஷ் (23). நெல்லை மாவட்டத்தில் செயல்படும் நிதி நிறுவனத்தில் வரிவசூலராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 6ம்தேதி தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வரிவசூலிப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். முள்ளக்காடு ராஜிவ்நகர் முனியசாமி கோயில் அருகே சென்றபோது வழிமறித்த வாலிபர்கள் இருவர், பிரகாஷை மிரட்டியதுடன் அவரது பைக்கை சேதப்படுத்தி அவர் வைத்திருந்த ₹14 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்றனர்.

பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த தெர்மல்நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஈடுபட்டது முத்தையாபுரம் ராஜிவ் நகரை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் முகேஷ் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் ராஜையா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஷோபா ஜென்ஸி கைது செய்தார்.

The post தூத்துக்குடி அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Spiknagar ,Perumal ,Prakash ,Tarangambadi Saminathapuram ,Karur district ,Nellai district ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் பயங்கரம் ராஜபாளையம் லோடுமேன் சரமாரி வெட்டிக்கொலை