- பகுதி-
- ஆசிரியர் கூட்டமைப்பு
- சென்னை
- நிலை
- பகுதிநேர ஆசிரிய
- செந்தில்குமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலகட்ட போராட்டம் நடத்திய பின்னர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முதலில் சம்பள உயர்வு ரூ.2,500 ரூபாய் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் உயர்த்த முதல்வர் பரிவு காட்ட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியாக 2016 மற்றும் 2021 தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணிநிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். எனவே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
The post பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.