சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதால், விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழு, விமானத்துக்குள் ஏறி பழுதை சரி பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாக முயற்சித்தும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து என்று நேற்று அதிகாலை அறிவிக்கப்பட்டது. இதனால் 148 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் உட்பட 160 பேர் நல்வாய்ப்பாக தப்பினர்.
The post தொழில்நுட்பக் கோளாறு மலேசிய விமானம் திடீர் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.