சென்னை: பெங்களூரு விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று காலை வந்தது. அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த நேரத்தில் பனிமூட்டத்துடன், மோசமான வானிலை நிலவியது. இதனால் ஏர் இந்தியா பயணிகள் விமானம் பெங்களூருவில் தரை இறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு விமானம் வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். வானிலை சீரடைந்ததும் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம், டீ காபி மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவைகளை விமானத்துக்குள்ளேயே வழங்கினர். அதன்பின்பு வானிலை சீரடைந்த பின்பு நேற்று காலை 8.30 மணி அளவில், ஏர் இந்தியா விமானம், சென்னையில் இருந்து மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
The post பெங்களூருவில் மோசமான வானிலை டெல்லியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.