×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உத்யம் பதிவு சான்றிதழ் பெற தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,டிச.7: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உத்யம் பதிவு சான்றிதழ் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின் படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் கூட்டு அளவுகோலின் படி வகைப்படுத்தப்படுகின்றன. குறு நிறுவனம் பதிவு செய்வதற்கு இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.5 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சிறு நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு முறையே ரூ.10 கோடிக்கு மிகாமலும் ரூ.50 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்,

நடுத்தரத் தொழில் நிறுவனம் பதிவு செய்வதற்கு இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.250 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இத்தகைய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் பான் கார்டு இருந்தால் தமது உற்பத்தி, வணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udyamregistration.gov.in என்ற இணைய தளம் வாயிலாக மிக எளிதாக தாமாகவே உத்யம் பதிவு சான்றிதழை இலவசமாக பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் உத்யம் பதிவு சான்றிதழ் பெற தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District ,Nagapattinam ,Collector ,Aakash ,Union Government ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் நகராட்சி பகுதியில்...