×

மாற்றாந்தாய் மனப்பான்மை கிடையாது தமிழகத்தின் தேவைகளை ஒன்றிய அரசு படிப்படியாக பூர்த்தி செய்யும்

விழுப்புரம், டிச. 7: விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் பகுதியில் புயல்பாதித்த பகுதி பொதுமக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: பெரும் மழையினால் அதிகளவு தண்ணீர் தேங்கி நகரமே களமாக காட்சியளித்தது. பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பாராளுமன்ற அவையிலேயே நான் தொடர்ந்து குரல் ெகாடுத்துள்ளேன். தமிழக மக்களை துயரத்திலிருந்து மீட்க ஒன்றிய அரசு, தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசு செய்யக்கூடிய பணியை முறையாக செய்வதுடன் அதனை வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு சரியான நேரத்தில் உதவி செய்ய வேண்டும். அதற்குண்டான முறையான பணியை ஒன்றிய அரசு நிச்சயமாக செய்யும். மத்திய அரசு குழுவை அனுப்பிய பிறகு படிப்படியாக தமிழக அரசின் தேவைகளை பூர்த்தி செய்யும். ஒன்றிய அரசை பொறுத்தவரை மாநிலங்களின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாத அரசாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களைப்போல் தமிழகத்திற்கும் மத்திய அரசு எல்லா தேவைகளுக்கான நிதியையும் ஒதுக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட தலைவர்கள் தசரதன், ராஜேந்திரன், சீனுவாசன் உடனிருந்தனர்.

The post மாற்றாந்தாய் மனப்பான்மை கிடையாது தமிழகத்தின் தேவைகளை ஒன்றிய அரசு படிப்படியாக பூர்த்தி செய்யும் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Viluppuram ,Tamil State Congress ,President ,G. K. Vasan ,
× RELATED ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில்...