×

பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு ஜாமீன்: பாதிக்கப்பட்ட நடிகையை மிரட்டக்கூடாது என நிபந்தனை

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் பிரபல மலையாள நடிகர் சித்திக் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்திக். இவர் மலையாள நடிகர்கள் சங்க பொது செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் தன்னை பலாத்காரம் செய்ததாக ஒரு நடிகை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து நடிகர் சித்திக் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கியது. மேலும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று அவர் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பின் போலீசார் சித்திக்கை கைது செய்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கேரளாவை விட்டு வெளியே செல்லக்கூடாது, பாதிக்கப்பட்ட நடிகையை மிரட்டக்கூடாது, சாட்சிகளை கலைக்கக் கூடாது, பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடைய யாரையும் சந்திக்கக் கூடாது, பாதிக்கப்பட்டவரை சமூக வலைதளம் மூலம் அவமதிக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

The post பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு ஜாமீன்: பாதிக்கப்பட்ட நடிகையை மிரட்டக்கூடாது என நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : Siddique ,Thiruvananthapuram ,Thiruvananthapuram court ,Malayalam Actors Association ,
× RELATED திருவெறும்பூர் புதிய ஏஎஸ்பி பொறுப்பேற்பு