×

அம்பேத்கரின் 68வது நினைவு நாள்: மாவட்டம் முழுவதும் மலர் தூவி மரியாதை

பூந்தமல்லி: அம்பேத்கரின் 68வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்டம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கரின் 68வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பூந்தமல்லி நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஜி.ஆர். திருமலை தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பூந்தமல்லி பைபாஸ் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர், அமைச்சர் சா.மு. நாசர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருத்தணி: சென்னை பைபாஸ் சாலை வேலஞ்சேரி கூட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தலித் மக்கள் முன்னணி தலைவர் மு.சு.திருநாவுக்கரசு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அக்கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட தலைவர் பா.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்.

புழல்: புழலில் திமுக சார்பில் 24வது வட்ட திமுக செயலாளர் சுந்தரேசன் தலைமையில் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் மாதவரம் மிசா.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், புழல் பகுதி காங்கிரஸ் சார்பில், பொறுப்பாளர் மு.தேவேந்திரன் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மாவட்ட செயலாளர் புழல் டி.சி.ராஜேந்திரன், பகுதி செயலாளர் கோபி ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புழல் அடுத்த கதிர்வேடு மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, 31வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை வடகிழக்கு புரட்சி பாரதம் மாவட்ட இணை செயலாளர் கதிர்வேடு பார்த்திபன், புரட்சி பாரதம் நிர்வாகிகள் அற்புதராஜ், திவாகர், கரிகாலன் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சுடர்மாவளவன், பிரபு உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், புழல் அம்பேத்கர் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

The post அம்பேத்கரின் 68வது நினைவு நாள்: மாவட்டம் முழுவதும் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,68th Memorial Day ,Poonthamalli ,68th Memorial Day of Ambedkar ,City Secretary ,G. R. AMBEDKAR ,THIRUMALI ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்த்தூவி மரியாதை