நட்சத்திரங்கள் என்பது வானில் உள்ள மண்டலங்களாகும். பொதுவாகவே நாம் சந்திரன் பயணிக்கக்கூடிய வாகனமாகவே நட்சத்திரங்கள் உள்ளன. ஏன்? நட்சத்திரத்தை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்ற சிந்தனை தோன்றலாம்? பூமியின் துணைக் கோள் சந்திரன் மட்டுமே. இந்த சந்திரன் உடல் காரகனாகவும் மனோகாரகனாகவும் மாதுர்காரகனாகவும் உள்ளான். அவ்வாறு உள்ள சந்திரன் பாதிக்கப்படும் பொழுது மனிதனின் மனம் பாதிக்கப்படும். மனமானது ஸ்திர நிலையிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட நிலைக்கு மாறுகிறது. அவ்வாறு மாறும் மனத்தின் தன்மையை உணரும் பொழுது மனித குணங்களும் மாற்றம் அடைகின்றன. தமிழ் மாதங்களில் மொத்த நாட்கள் என்பது முப்பது நாட்களாக எடுத்துக் கொள்வது நட்சத்திரங்களில் ஒவ்வொரு மாதமும் சந்திரன் பயணிக்கும் எண்ணிக்கையாகவும் அதில் சூரியன் ஒரே ராசியில் ஒன்பது பாதங்களையும் கடக்கிறான்.சந்திரன் எங்கெல்லாம் பயணிக்கிறதோ அவ்விடத்தில் உள்ள தன்மைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை சந்திரனுக்குள் நிகழ்கிறது. உதாரணமாக நீரானது எந்தப் பாத்திரத்தில் உள்ளதோ அதே வடிவத்தை நீர் எவ்வாறு மாறிக் கொள்கிறது. அதே போன்று சந்திரனும் சில தன்மைகளை பெற்றுக் கொள்கிறது.இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒவ்வொரு நாளும் கிரகங்கள் பயணிக்கும் வாகனமாக உள்ளன.
ஒவ்வொரு நட்சத்திரங்களை ஒவ்வொரு அதிதேவதைகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. அந்த அதிதேவதைகளும் கிரகங்களாகவே உள்ளது என்பது மிக ஆச்சரியத்திற்குரிய அமைப்பாக உள்ளது.வெண்மையான பாலில் டீத்தூள் கலக்கும்போது டீயாகவும், காபி டிகாஷன் சேர்க்கும்போது காபியாகவும், மோருடன் கலக்க தயிராகவும் மாறுவதுபோல்தான் நம் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. நட்சத்திரக் கதிர்வீச்சுகள் அதற்குரிய தன்மையோடுதான் பூமியை அடைகிறது. அதனோடு கிரகங்களின் கதிர்வீச்சும் இணைந்து ஒரு ரசவாத மாற்றத்தை நிகழ்த்துகின்றது.ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களை கொண்டுள்ளது. இந்த நான்கு பாதங்களிலும் நான்கு விதமான பலன்களும் மற்ற கிரகங்களின் பார்வைகளும் உள்ளதால் நட்சத்திரங்கள் மிக நுண்ணிய அமைப்பாக இருந்து மாற்றத்தை உருவாக்குகின்றன.இயற்கையும் கிரகங்களும் சற்றுகூட மாறுவதில்லை. இலை இளமையாக இருக்கும். பச்சையத் தன்மை இழந்தவுடன் பழுப்பாகி உதிர்ந்துவிடும். உதிர்ந்து விட்டதிலிருந்து மாறும்போது அது மீண்டும் உடலெடுத்து அனுபவிக்கும். மீண்டும் நட்சத்திரத்தின் ஆதிக்கம் தொடரும். உடல் எடுத்து விட்டோமென்றால், முந்தைய ஜென்மத்தில் எந்த தசையில் உடலை விட்டோமோ அதன் தொடர்ச்சியைத்தான் இப்போது நாம் மேற்கொள்கிறோம்.
அதைக் கொண்டுதான், ‘தாயின் கர்ப்பத்தில் சென்றதுபோக நின்று பலன் தரும் வருடங்கள்’ என ஜோதிடர் கணக்கு போட்டு பலன் சொல்லுவார்.கேரளாவில் பெயர்களுக்கு முன்னால் நட்சத்திரங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது. குழந்தை பிறப்பெடுத்ததும் ஜோதிடரிடம் சென்று என்ன பெயர் வைக்கலாம்? எனக் கேட்கும் பொழுதும் அவர் முதலில் கேட்கும் கேள்வி. குழந்தை எந்த நட்சத்திரத்தில ஜனனம் ஆனது என்றுதான் கேட்கிறார். பண்டைய காலங்களில் எழுதி வைப்பதற்கும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் சிரமமான சூழ்நிலைகள் உண்டு. அந்த சிரமத்தினை தவிர்க்கவே நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. பெயர்களை சொன்னவுடன் வந்தவர் இந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் என்பதை ஜோதிடர் கண்டறிந்து விடுவதாகும்.முன்னோர்கள் சந்திரன் என்ற மனம் பாதிக்கப்பட்டால் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதனை உணர்ந்துள்ளனர்.நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு குணங்களையும் சில தீர்வுகளையும் கண்டறியலாம் என்பது ஜோதிடத்தின் ஒரு யுக்திதான். அதற்கு பரிகாரங்களாக கோயில்களும் நட்சத்திர அதிபதிகளும் தீர்வாக அமையும் என்பது நிச்சயமான உண்மைதான்.இனிவரும் வாரங்களில் நட்சத்திரங்கள் வழியாக தீர்வுகளையும் பரிகாரங்களையும் தேடுவோம்…
சிவகுமார்
The post நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.