×

புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம். கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர். தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி – நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!

The post புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stal ,
× RELATED அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்த்தூவி மரியாதை