×

அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக வலுப்பெறுமா..? : வானிலை மையம் விளக்கம்

சென்னை : தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை மத்திய வங்கக்கடலிலும் டிசம்பர் 2வது வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால் இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை எனவும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 12ம் தேதி இலங்கை மற்றும் தமிழ்நாட்டு கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் இதுவரை வெளியிடவில்லை. கணினி மாதிரிகள் அடிப்படையிலான தரவுகளை மட்டுமே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகை தர உள்ளனர். மத்திய உள்துறை, பேரிடர் குழு, வேளாண்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த 8 பேர் வருகை தரவுள்ளனர். சென்னை வரும் குழு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளை பார்வையிடவுள்ளனர்.

The post அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக வலுப்பெறுமா..? : வானிலை மையம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,India Meteorological Department ,South Bay of Bengal ,Central Bay of Bengal ,South East Bay of Bengal ,Meteorological Department ,
× RELATED அதி கனமழை எச்சரிக்கை டெல்டா...