×

தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி

 

பாலக்காடு, டிச.6: பாலக்காடு – குருவாயூர் – பாலக்காடு தேசிய சாலையில் தனியார் பஸ்கள் நேற்று இயங்காததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். பாலக்காடு – குருவாயூர் – பாலக்காடு வழித்தடத்தில் அதிகளவில் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த 3 ம்தேதி இரவு குருவாயூரில் இருந்து பாலக்காடு நோக்கி தனியார் பஸ் வந்துள்ளது. அப்போது பேர் பஸ் ஸ்டாப் இல்லாத இடமான வளைவு சாலையோரம் நின்றபடி பஸ்சை தடுத்துள்ளனர். பஸ் ஸ்டாப் இல்லாத இடத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேர் பஸ்சின் பின் கண்ணாடி மீது கல்லை வீசி தாக்கியுள்ளனர். இதில் ண்ணாடி உடைந்து கல் பஸ்சிற்குள் விழுந்தது. இதனைத்தொடர்ந்து கல் வீசியவர்கள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் பாலக்காடு – குருவாயூர் – பாலக்காடு சாலையில் நேற்று முன்தினம் பஸ்கள் இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Guruvayur ,Palakkad National Road ,Palakkad route ,Dinakaran ,
× RELATED மாயாபுரம் குடியிருப்பு பகுதியில்...