விருதுநகர், டிச.6: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருதுநகர் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து விருதுநகர் வழியாக செல்லும் ரயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இயில் பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர்.
இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, எஸ்ஐ.க்கள் கார்த்திக், ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட ஹவுசிகா ரயில்வே பாலத்திலும் சோதனை செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயிலிலும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
The post டிச.6 தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் சோதனை appeared first on Dinakaran.