×

தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகியை வெட்டியவர் கைது

தூத்துக்குடி, டிச. 6: தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் தனராஜ் (37), தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை தலைவராக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தபால்
தந்தி காலனியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்தவர், அங்கு கிடந்த திருஷ்டி தடியங்காய் மீது ஓட்டியதில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். அவரை தனராஜ் மீட்ட போது, ஆத்திரமடைந்த அந்நபர் தடியங்காயை வீட்டு முன் உடைத்ததால் தான் வழுக்கி விழுந்ததாகக் கூறி அரிவாளால் தனராஜை வெட்டியுள்ளார். இதில் அவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த உடை மரம் வெட்டும் தொழிலாளிகளான சித்திரை பிச்சமுத்து, அவரது தம்பி ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து தனராஜை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து சித்திரை பிச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகியை வெட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thoothukudi Thoothukudi ,Dhanaraj ,Thoothukudi Postal Telegraph Colony ,South District AIADMK ,Postal Telegraph Colony ,Thoothukudi ,
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர் தேடப்படும் நபராக அறிவிப்பு..!!