காரைக்கால்,டிச.6: காரைக்காலில் மழை வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநில அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டர் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.30,000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை புதுவையில் நேற்று நேரில் சந்திந்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது பொருளாளர் சண்முகநாதன்,இணை செயலாளர் சோமு மற்றும் நெடுங்காடு ராஜேந்திரன் ஐயப்பன்,சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post காரைக்காலில் மழை வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.