×

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

சீர்காழி, டிச. 5: சீர்காழி அருகே தென்னாம்பட்டினத்தில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சியில் பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்த நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் சரளா கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

இவ்விழாவில் ஒன்றிய எம்ஜிஆர் அணி செயலாளர் ராஜசந்திரசேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எழரசி, வார்டு உறுப்பினர்கள் அகோர மூர்த்தி, இடும்பன், புனிதா, மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

The post புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,Sirkazhi ,Tennapattinam ,Mayiladuthurai District, ,South Panchayat ,
× RELATED கோடியக்கரை ஊராட்சி மன்றத்திற்கு ரூ.30...