×

வெள்ள பாதிப்பில் அரசியல் செய்யாமல் தமிழக அரசு கேட்ட ரூ2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பதிக்கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர். தொடர்ந்து விழுப்புரம் அலுவலகத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி அளித்த பேட்டி: மிகப்பெரிய அளவிலான பேரிடர் நிகழ்ந்திருக்கிறது.

மாநில அரசே மொத்தமாக அனைத்து நிதியுதவிகளையும் வழங்கும் என எதிர்பார்க்காமல், தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒன்றிய அரசு நிதியை வழங்க வேண்டும். வெள்ள பாதிப்பில் அரசியல் செய்யாமல் முதல் தவணையாக மாநில அரசு கோரிய ரூ2 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வெள்ள பாதிப்பில் அரசியல் செய்யாமல் தமிழக அரசு கேட்ட ரூ2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu government ,Marxist ,Villupuram ,Central Committee ,Marxist Communist Party ,Vasuki ,Shanmugam ,State Committee ,Ravindran ,Cyclone ,Benjal ,Villupuram district ,Communist ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை...