×

நாசரேத் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

நாசரேத், டிச. 5: நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக். பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது. ‌சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளி இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கராத்தே தலைவர் செந்தில் பயிற்சி அளித்தார். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு கராத்தே பட்டய தேர்வு நடந்தது. தேர்ச்சியடைந்த மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் தங்கம் நளினா, முதல்வர் கலா ஜேனட், கராத்தே பயிற்சியாளர் பேச்சிமுத்து மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் பாராட்டினர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் முத்துராஜா செய்திருந்தார்.

The post நாசரேத் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Karate ,Training Camp ,Nazareth ,School ,Nazareth Markashis Matric ,Suresh Kumar ,Head Coach ,Sobukai Kojurio Karate School India ,Tuticorin District ,Karate President ,Senthil ,Karate Training ,Camp ,Dinakaran ,
× RELATED முடிவைத்தானேந்தல் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்