சிவகங்கை, டிச. 5: தமிழகத்தில் 2007ம் ஆண்டு கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அணியாதவர்களது லைசென்ஸ் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு புதிதாக போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால், மாவட்டத்தில் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததால் விபத்துகள்அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து போக்குவரத்து போலீசார் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி டூவீலர் ஓட்டிகளை ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும். அப்போது தான் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.
The post ஹெல்மெட் விழிப்புணர்வு அவசியம் appeared first on Dinakaran.