×

எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வரலாம்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வரலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு
அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். “தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார். நாங்கள் மக்களிடம் நேரடியாக கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்து வருகிறோம். முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுடன் மக்களாக பணியாற்றுகின்றனர். அகரம்பள்ளிப்பட்டு – தொண்டைமானூர் இடையேயான மேம்பாலம் முழுமையாக இடிந்து விழவில்லை” எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வரலாம்: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Akarampallipattu ,Minister AV Velu ,CHENNAI ,Minister AV ,Velu ,Leader of the Opposition ,Dinakaran ,
× RELATED அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின்...