- சமாஜ்வாடி
- பிறகு நான்
- தேனி மாவட்டம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டம்
- சக்ரவர்த்தி
- தேனி எஸ்.பி.
- தின மலர்
தேனி, டிச.4: தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், தேனி எஸ்.பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது எஸ்பி, வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் இருந்ததால் அக்கட்சியினரை சந்திக்காமல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அக்கட்சியினர் எஸ்பி அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தேனி போலீசார், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எஸ்பி அலுவலக அறைக்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சிவபாலன், முறையாக பணிபுரியாத காரணத்தால் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக இத்தகைய சூழல் ஏற்பட்டதாக கருதி, அவரை தேனி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The post எஸ்பி அலுவலக முற்றுகை சம்பவத்தில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.