×

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு செல்ல மருங்குளத்திலிருந்து நேரடி பஸ்

தஞ்சாவூர், டிச. 3: மருங்குளத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சாவூர், சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வௌிமாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் தினமும் வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதியில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்துகள் இயக்கபடுகின்றன. நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள மருங்குளத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. அந்த கிராம பகுதியில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வர தஞ்சை பழைய பேருந்து நிலையம் சென்று மாற்று பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த பகுதியில் உள்ள மக்கள் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மருங்குளத்திலிருந்து நாஞ்சிக்கோட்டை வழியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சை அரசு மருத்துவமனைக்கு செல்ல மருங்குளத்திலிருந்து நேரடி பஸ் appeared first on Dinakaran.

Tags : Marungulam ,Tanjore Government ,Hospital ,Thanjavur ,Government Medical College Hospital ,Nanchikottai ,Waumiwats ,Tanjore Medical College Hospital ,Tanjore ,Government ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...