மதுரை, டிச. 3: உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில், மதுரையில் நேற்று வாகன பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில், மூன்று சக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியத்தில் தொடங்கி, தல்லாகுளம் வழியாக நடைபெற்ற ந்த பேரணி இறுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது.
பின்னர் கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் தவழும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். 60 முதல் 79 சதவீதம் வரை உடலுறுப்புகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிக்க வேண்டும். பிற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் அளித்து உதவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதில் மாநில பொதுச் செயலாளர் ராஜா, தலைவர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் சுரேஷ்பாண்டியன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கோரிக்கைகளை வலியுறுத்தி தவழும் மாற்றுதிறனாளிகள் பங்கேற்ற வாகன பேரணி appeared first on Dinakaran.