×

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 6 மாத குழந்தை உயிரிழப்பு

மாதவரம்: தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது. பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் மனோஜ்(25). கார்பென்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குஷ்பூ ஷர்மா. தம்பதிக்கு, 4 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தம்பதிக்கு யுவராஜ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று காலை 7 மணியளவில் குஷ்பூ ஷர்மா தனது 6 மாத குழந்தைக்கு பால் கொடுத்து, தூங்க வைத்துள்ளார்.

மீண்டும் 7.30 மணியளவில் வந்து பார்த்தபோது, குழந்தை மூச்சு பேச்சின்றி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, உடனடியாக குழந்தையை மீட்டு, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து செம்பியம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 6 மாத குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Perampur ,Manoj ,Perambur Melpatti Ponnappan Street ,Khushboo Sharma ,
× RELATED வேலையை விட்டு நிறுத்தியதால் பெட்ரோல்...