- மன்னை எக்ஸ்பிரஸ்
- பெஞ்சல் புயல்
- நீடாமங்கலம்
- சென்னை எழும்பூர்
- சென்னை
- திருவாரூர் மாவட்டம்
- பென்ஜால்
- தின மலர்
நீடாமங்கலம்,டிச.2: புயல் காரணமாக சென்னை எழும்பூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்து சேர்ந்தது சென்னை எழும்பூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக தினந்தோறும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது வழக்கம். இதனால் சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், முத்துப்பேட்டை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவோர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். சரியான நேரத்திற்கு வந்து சரியான நேரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் அதிகாலை 5.22 மணிக்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்து விடும். ஆனால் நேற்று காலை 6.48 மணிக்குத்தான் நீடாமங்கலம் வந்தது.
அதாவது ஒருமணி நேரம் 26 நிமிடங்கள் தாமதமாக இந்த ரயில் நீடாமங்கலம் வந்து சேர்ந்தது. தற்போது அடித்து வரும் பெஞ்சல் புயல் காரணமாகவும், மிகவும் மோசமான வானிலை நிலவியதாலும் ரயில் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ரயிலில் வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
The post பெஞ்சல் புயல் காரணமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் appeared first on Dinakaran.