×
Saravana Stores

கடுங்குளிர், சாரல் வெறிச்சோடியது கொடைக்கானல்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவது வழக்கம். ெகாடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் கடும் குளிர் நிலவி வருகிறது.  மாலையிலே துவங்கி விடும் இந்த கடும் குளிர் மறுநாள் விடியும் வரை நீடிக்கிறது.

இந்த சீதோஷ்ண நிலையால் நேற்று வார விடுமுறை நாளிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பெஞ்சல் புயல் காரணமாகவும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளது. அதேநேரம் கொடைக்கானல் வந்துள்ள வடமாநில புதுமண தம்பதியினர் கப்பிள்ஸ் சீசனை வெகுவாக அனுபவித்து வருகின்றனர்.

The post கடுங்குளிர், சாரல் வெறிச்சோடியது கொடைக்கானல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Ekadaikanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் அழுகிய...