×
Saravana Stores

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 23ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இருந்தது. கடந்த 27ம் தேதி இது புயலாக மாறும் என கூறப்பட்டது. ஆனால் அது மெதுவாக கடல் பகுதியில் நகர்ந்தபடி போக்கு காட்டியது. அன்று புயலாக மாறவில்லை.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இதேபோல் அது புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அன்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்று முறிவு உள்ளிட்ட காரணிகளால் புயலாக வலுப்பெறாது. மேலும் அது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் புயல் ஆபத்து நீங்கியதாக கருதப்பட்டது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு தொடரும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அமைப்பு மேலும் வலுவடைய தொடங்கியது. அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு தடையாக இருந்த காரணிகள் விலகின.

இதனால் வேமாக வலுவடைய துவங்கியது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், அது மேலும் வலுவடைந்து நேற்று பிற்பகவல் 2.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கத் தொடங்கும். புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

The post ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Storm ,Meteorological ,Chennai ,Fengel ,Bank Sea ,Storm Fengel ,Meteorological Center ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ...