×
Saravana Stores

எடப்பாடி பற்றி கேள்வி: சசிகலா சிரிப்பு


மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மழையில் சேதம் அடைந்த பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நேர்மையான முறையில் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாகுபாடின்றி உரிய இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தேர்தலில் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை தமிழ்நாடு மக்கள் தான் முடிவு செய்வார்கள்’ என்று கூறினார்.

அதிமுக கள அய்வு கூட்டத்தில் ஆங்காங்கே நடக்கும் மோதல், அதிமுக செயற்குழு, பொதுக்குழு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் சசிகலா சிரித்தவாறு காரில் ஏறிச்சென்றார்.

The post எடப்பாடி பற்றி கேள்வி: சசிகலா சிரிப்பு appeared first on Dinakaran.

Tags : EDAPPADI ,SASIGALA LAUGHS ,MANNARGUDI ,THIRUVARUR DISTRICT ,TAMIL NADU ,RAINFALL ,Sasikala Laughter ,
× RELATED பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி?...