×

வாங்கிய பணத்தை திருப்பி தராத தகராறு காவலர் மனைவி மகள் மீது தாக்குதல்

சென்னை: வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் செல்லதுரை (45). இவர் தற்போது புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். செல்லதுரை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, கோட்டூர்புரம் துரைசாமி நகரை சேர்ந்த ரம்யா (29) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, காவலர் செல்லதுரை அடிக்கடி ரம்யாவிடம் பணம் பெற்று வந்துள்ளார். ஆனால், அதை திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரம்யா நேற்று முன்தினம் காவலர் செல்லதுரை வீட்டிற்கு சென்று, அவரது மனைவி செல்விமற்றும் மகள் மாலினி யிடம் பணத்தை திரும்ப கேட்டு தாக்கியுள்ளார். காவலர் செல்லதுரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, இதே போல் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த நெருக்கத்தால் அவரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் அவர் சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பேலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

The post வாங்கிய பணத்தை திருப்பி தராத தகராறு காவலர் மனைவி மகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sellathurai ,Vadpalani Sivan Temple Street ,Pudupet Armed Forces ,Cheldurai Koturpuram Police Station ,Ramya ,Koturpuram Duraisami City ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!