×
Saravana Stores

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 42 ரன்னில் சுருண்டது இலங்கை: 5 பேர் ‘டக் அவுட்’

டர்பன்: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. டர்பனில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இ்ன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 70 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், லகிரோ குமாரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்கோ ஜான்சன் வேகத்தில் சுருண்டது. 13.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட இலங்கை அணி 42 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சந்திமால், குசல் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஸ்வா பெர்னாண்டோ, அசித்தா பெர்னான்டோ ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்கோ ஜான்சன் 6.5 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

The post தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 42 ரன்னில் சுருண்டது இலங்கை: 5 பேர் ‘டக் அவுட்’ appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,South Africa ,Durban ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் முதல் டெஸ்ட் போட்டி 233...