×
Saravana Stores

கோயில் யானைகளை பராமரிப்பது எப்படி? அறநிலையத்துறை புதிய உத்தரவு

சென்னை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* யானைகள் உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* யானையின் எடை மற்றும் வயதுக்கு ஏற்றவாறு உணவு வழங்கப்பட வேண்டும்.
* பக்தர்கள் மற்றும் மது அருந்தியவரை யானையின் அருகில் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
* ஆபத்தை விளைவிக்கும் எவ்வித செயல்பாடுகளையும் யானையிடம் செய்வதை அனுமதிக்க கூடாது.
* யானைகளை புகைப்படம் எடுப்பது, யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
* உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது.
* பல் சொத்தை இருக்கும் யானைகளுக்கு சிறிய அளவு வாழைத்துண்டு அளிக்கலாம்.
* வாண வேடிக்கைகள், மிகுந்த ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பயன்படுத்தும் இடம், பட்டாசுகளின் வெடி சத்தம் உள்ள இடங்களுக்கு யானைகளை அழைத்து செல்லக்கூடாது.
* வாலை பிடித்து இழுப்பது, யானைகளின் மீதுள்ள முடியினை பறித்தல் போன்ற யானைகளுக்கு எரிச்சலூட்டும் செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது.
* மின்சாதனங்கள், மின்கம்பிகள், மின்இணைப்புகள் உள்ள பகுதிகளின் அருகில் யானைகளை அழைத்துச் செல்லக்கூடாது.

 

The post கோயில் யானைகளை பராமரிப்பது எப்படி? அறநிலையத்துறை புதிய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Charity Department ,CHENNAI ,Department of Hindu Endowments ,Order ,Charities Department ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...