×
Saravana Stores

மழையால் பாதித்த பயிர்களை கணக்கெடுத்து விரைவில் நிவாரணம்: அமைச்சர் தகவல்

தஞ்சை: தமிழகத்தில் மழையால் பாதித்த பயிர்களை கணக்கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பல்லவராயன்பேட்டை கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: மழை காரணமாக மாநிலம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து கணக்கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

தஞ்சையில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட உக்கடை, பல்லவராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்களை ஆய்வு செய்துள்ளோம். பயிர்கள் பாதிப்பு 33 சதவீதத்திற்கு மேல் இருந்தால் கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post மழையால் பாதித்த பயிர்களை கணக்கெடுத்து விரைவில் நிவாரணம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Tanjore ,MRK Panneer Selvam ,Tamil Nadu ,Minister of Agriculture ,M.R.K. Panneerselvam ,
× RELATED 34,372 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில்...