- பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக் குழு
- தர்ணா
- நாகர்கோவில்
- பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஒருங்கிணைப்புக் குழு
- பிஎஸ்என்எல்
- ஈஎஸ்ஐ
- தின மலர்
நாகர்கோவில், நவ.28: நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் 2வது விஆர்எஸ் திட்டத்தை கை விட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், இபிஎப் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளின் தொடக்கத்ைத விரிவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிஎஸ்என்எல் வலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் காளியப்பன், வேலப்பன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 2வது விஆர்எஸ் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்பு குழு தர்ணா appeared first on Dinakaran.