×
Saravana Stores

சுனாமி பேரிடர் கட்டிடம் ஆய்வு

தொண்டி,நவ.28: தொண்டி அருகே நம்புதாளை சுனாமி பேரிடர் கட்டிடத்தை தாசில்தார் ஆய்வு செய்தார். பெங்கல் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் நேற்று தொண்டி அருகே நம்புதாளை சுனாமி பேரிடர் காப்பகத்தை திருவாடானை தாசில்தார் அமர்நாத் பார்வையிட்டார். மக்கள் தங்க ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் மேகமலை, ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம் உட்பட அலுவலர்கள் ஈடுபட்டனர்.

The post சுனாமி பேரிடர் கட்டிடம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tsunami disaster ,Thondi ,Tahsildar ,Nambudalai ,disaster ,Bengal ,Dinakaran ,
× RELATED வெடிமருந்து பறிமுதலில் ஒருவர் கைது