- மயிலாடுதுறை மாவட்டம்
- துணை தலைவர்
- உதயநிதி
- சட்டமன்ற உறுப்பினர்
- நிவேதமுருகன்
- மயிலாடுதுறை
- மயிலாடுதர மாவட்டம்
- பம்புகர் சட்டமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- மயிலாடுதுறை மாவட்டம்
- தின மலர்
மயிலாடுதுறை.நவ.27: மயிலாடுதுறை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் என்று கட்சியினருக்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒற்றை செங்கல்லால் ஒன்றிய அரசின் முகமூடியை கிழித்து ஒன்றிய அரசை அதிர வைத்த திராவிட மாடல் அரசின் துணை முதலமைச்சர், இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று (27ம்தேதி) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை, வார்டுகள் தோறும் கழக கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு புத்தாடை, உணவு வழங்க வேண்டும். மரக்கன்றுகள் நட்டும், வழங்கியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்க வேண்டும். மாவட்டத்தில் 10 இடங்களில் மருத்துவமுகாம், 10 இடங்களில் ரத்ததான முகாம், 5 இடங்களில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி சின்னவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு துணை முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். விழா ஏற்பாடுகளை மாநில, மாவட்டக் கழக நிர்வாககிள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாaகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை, வார்டு கழக நிர்வாகிகள் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம்: எம்எல்ஏ நிவேதா முருகன் அறிக்கை appeared first on Dinakaran.