- மார்க்சிஸ்ட்
- விருதுநகர்
- மார்க்சிஸ்ட் கட்சி
- நகர செயலாளர்
- விருதுநகர் கலெக்டர்
- ஆத்துமேடு
- 35வது வார்டு
- விருதுநகர் நகராட்சி
- தின மலர்
விருதுநகர், நவ.27: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் தலைமையில் நேற்று மனு அளித்தனர். மனுவில், விருதுநகர் நகராட்சி 35வது வார்டு ஆத்துமேடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கு மேல் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விருதுநகரில் நடைபெற்ற மக்களோடு முதல்வர் முகாமில் வீட்டிற்கான பட்டா கோரி மனு அளித்தனர். ஆனால் விருதுநகர் வருவாய்த்துறை, குடியிருப்புகள் உள்ள இடம் நகராட்சி வரைபடத்தில் வழித்தடம் என இருப்பதால் பட்டா வழங்க இயலாது என மனுவை தள்ளுபடி செய்தனர்.
நகராட்சி வரைபடத்தில் வழித்தடம் என இருப்பதை வகை மாற்றம் செய்து குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளோம். அதை தொடர்ந்து வட்டாட்சியர் வீடுகளை அளந்து அறிக்கை தர கோரி, நகர நில அளவையாளர் அனைத்து வீடுகளையும் அளந்து அறிக்கை அளித்து விட்டார். மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
The post பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி மனு appeared first on Dinakaran.